என் செல்ல ஆண்டவா !!

ஒன்று இரண்டு என்று எண்ண முடியுமா உன் ஆசீர்வாதங்கள் என் செல்ல ஆண்டவா !
இல்லை சத்தமில்லாமல் அதனை மறக்கத்தான் முடியுமா என் அருமை நண்பா !
என் சின்ன காயங்களை வலிக்காமல் ஆற்ற வின்னுலகில் இருந்து எனக்காய் பிறந்தாயோ
நான் தவறு செய்தால் செல்லமாய் கண்டிக்க என் கூடவே இருந்தாயோ
உன்னை மறந்து எனக்காக வாழ என் மனசு கேக்குமா கொஞ்சம் சொல்லு !
உன்னை அப்படி மறந்து தான் இருக்க முடியுமா நீயே சொல்லு !
வெளியெ விழுந்த கண்ணீரை துடைக்க என் துணைவி இருக்க
உள்ளே அழுது காய்ந்து போன கண்ணீரை துடைக்க நீதானே இருக்க
காசு வேண்டா, பதவி வேண்டா இவ்வுலகத்தில் எந்தபொருளையும் தர வேண்டா, உன் காலடி இடம் பொதும்!!
என் குட்டி இதயத்தில் எத்தனை நசுக்கல்கள்
அதில் வழிந்த ரத்தத்தில் எத்தனை பிசுக்கல்கள்
இவை எல்லாம் என்னால் தாங்க முடியவில்லயே
என்று உன்னால் பொறுக்கமுடியலயோ...
நெஞ்சு கனக்கும்போது என்னை கொஞ்சி கொஞ்சி அழைத்தாயே...
விழி பிதுங்கி பாரம் நசுக்கும்பொது அதனை லேசாய் எடுத்தாயே....
இனி எனக்காக என்ன இருக்கு...உனக்காக வாழ மட்டும் வரம் கொடு.....

0 Comments:
Post a Comment
<< Home