அந்த ஒரு சொல்..

க்ரீஈஈங் என அலாரம் மணியாய் 5 மணிக்கு எழுப்பியது என் Cellphone Sunday இல்.
'There is a critical job abend in production, Can you please look at it' என என் Manager.
'Yes I will start in 15 mts' என எரிச்சலாய் மனதுக்குள்.
அரை குறை உறக்கத்தோடு பாதி மயக்கத்தோடு டூத் ப்ரஷ் தன் வேலையை ஆரம்பித்தது...
ஐஸ் கட்டி மழையாய் ஷவர் எரிச்சலூட்டி தூரலாய் மாறியது..
'அம்மா சீக்கிரம் மோட்டார் போடுங்கம்மா'
சோப்பை கரைக்க முடியாமல் காக்கை குளியல்.
தலையில் ஏதோ ஒட்டி கொண்டு இருப்பதை காய வைக்க மின் விசிரி Olympic ஓட்டம்...
அறைகுறையாய் வெந்தவாறு பசையாய் இட்லி..
'உங்களுக்கு Time ஆகலயா சீக்கிரம் சீக்கிரம்' விரட்டியவாறு என் ஆத்துகாரி வேறு
சட்டையில் ஆயிரம் மடிப்பு வர மாட்டியவாறு..ஜெட் வேகத்தில் என் அதரகாலத்து 'புகை' வண்டியில்
'என்ன Sir இவ்ளோ சீக்கிரம்? ' நக்கலாய் Security
Seat ற்க்குள் வருவதர்க்குள் ஒரு நாலைந்து தடவை 'Manager Calling ...Manager Calling..' Cellphone நெருப்பில் எண்னை ஊற்றியது
கண் சிமிட்டியபடி என் கணிணி காலை தூக்கத்திலிருந்து அவசர அவசரமாய் எழும்பியது..
'டேய் உனக்கு நேரம் காலமே கிடயாதா' எரிச்சலாய் அது தன் மனதுக்குள்
அதன் மனதினை புரிந்து கொண்டு வந்த எரிச்சலையெல்லாம் அதன் Keyboard ஐ அடித்தவாரு ஆரம்பித்தேன் என் வேலையை...
மறுபடியும் 'Manager calling ...Manager calling' என் Cellphone படு நக்கலாய்
'இருயா வரேன்..'
'I have started my task, I will be finishing it soon !!'
OK Get Set Gooooooooooooo !!!
Keyboard ஐ அடித்து ஒடித்து...எகிறி குதித்து
தலையை பிய்த்து...முட்டி மோதி..
வேலையை முடித்து பார்த்தால் மணி 7.. அட Evening 7 பா...
ஏதோ! ஏதோ மறந்துட்டேனே !...ஏதோ மறந்துட்டேனே !...
அட ஆமாம் Lunch..சாப்பிட்டேனா ???
சரி ஏதோ ஒண்ணு வேலையை ஒழுங்காய் முடித்தேனே என திருப்த்தியில் என் வண்டி வந்த பாதையில்
மறுபடியும் 'Manager calling....Manager calling...' அட நிறுத்த மாட்டியா நீ
'Some other job has abended...' Manager ஒரு Psycho சிரிப்பாய்
Cellphone ஐ இதற்க்கு அப்புறம் Switch off செய்வதென்று புரிந்து கொண்டேன்
மறுபடியும் Repeat steps from 1 by 1 until எனக்கு பைத்தியம் பிடிக்க...
கடைசியில் ஏதொ ஒரு வழியாய் என் வீட்டில் மறுபடியும் நான்..?
வலிகளை சுமந்தவாறு மனது, ஆறுதலாய் என் துணைவி..
நாம Life ல நிறைய விஷயங்கள் Miss பண்ரோம்ல..
ஏனொ மலை போல் அழுத்தங்கள் ... தாங்க முடியாமல் கண்கள் பனிக்க..
இவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் மறக்கும் அந்த ஒரு சொல்..
'ஐ அப்பா வந்தாச்சு !!'

0 Comments:
Post a Comment
<< Home