Tuesday, July 11, 2006

Love before marriage...




தென்றலாய் மிதந்து வந்த தேன் காற்றில் காதல் சொன்னாய்
சபை கூடிய கூட்டத்தில் கண்ணடித்து காதல் சொன்னாய்
சட்டென்று எனை பார்ததும் நாணத்தால் இமை குனிந்து காதல் சொன்னாய்
தூரத்தில் எனை கண்டதும் நெஞ்சம் வியர்த்து காதல் சொன்னாய்
கால்களால் கோலம் போட்டு காதல் சொன்னாய்
கவிதை பாடி காதல் சொன்னாய்

உன் விடுதி தோழிகளை எல்லாம் கூட்டி வைத்து நம் காதல் சொன்னாய்
காதலே வெறுக்குமளவுக்கு காதல் சொன்னாய்..

இன்னும் சில தினங்களில் நமக்கு கெட்டி மேளம் உங்கள் ஊரில்..
ஆனால் இன்னமும் உன்னை உணரவில்லை…
ஊருக்கு வழி அனுப்ப நான் உன்னுடன்…
உன் கண்கள் பனித்து கை அசைத்து காதல் சொல்கிறாய்…


இதோ உன் ஒவ்வொரு நீர் துளியும் உன் காதலை என்னுள் ஆழமாய் இறக்குகிறதே……
வலித்ததடி என்னுள் வெகு ஆழத்துக்குள் உன் சிறு பிரிவு….
என்னை தனியே விட்டு சிரு பொட்டாய் மறைந்து சென்று இருக்கிறாய்…

சொல்ல காத்திருக்கின்றேன் என் உயிர் நீதான் என்று நம் மண மேடையில்…






1 Comments:

Anonymous Anonymous said...

காதலே வெறுக்குமளவுக்கு காதல் சொன்னாய்..

nice kavithai

10:38 AM  

Post a Comment

<< Home