கிழிக்க படாத பக்கங்கள்

இலைகள் உறசாடி குளிர் காற்று வீசும் இரவிலே
என் பேருந்து அந்த காற்றை கிழித்துக்கொண்டு பறந்து கொண்டிருந்தது
உடம்பில் சில சில்லென்று நீர்த்துளிகள் ஜன்னலோரமாய் வந்து தீண்டியது
எங்கோ சில தேனிசை ராகங்கள் காதோரமாய் வந்து ரீங்காரமிட்டு
கொண்டிருக்க கண்ணை அசர செய்தது
மனம் சில சுவையான நினைவுகளை சுமந்து கொண்டு அசை போட
தொடங்கியது ஏதோ ஒரு பழைய புத்தகத்தின் மூவாயிரத்து அறுபத்தி ஐந்தாம் பக்கத்தின் நினைவுகளை கொண்டு வந்து என் கண் முன் காட்டியது
இதோ இப்பொழுது எனக்கு எட்டு வயது, என் சிறு நண்பர்களோடு
பொழுதாகிய பின் கண்ணாமூச்சி விளையாடுகிறேன் கவலையே இல்லாத நேரங்கள் எத்தனை சந்தோஷம் எத்தனை ஆர்பாட்டம்
கண்ணை கட்டி , கட்டி பிடித்து , உருண்டு பிரண்டு , நீர் தெளித்து , சிரிப்பு மூட்டி , அணைத்து கொண்டு
மழையில் நனைந்து கொண்டு , ஓடி கொண்டு , மறைந்து கொண்டு , சிரித்து கொண்டு , எல்லாம் என் தோழியோடு சேர்ந்து கொண்டு
இத்தனை ஆற்பாட்டம்
இதோ என் தோழி என் கைப்பிடித்து கொண்டே விளையாடுகிறாள் , அவளது கை பிடியின் அழுத்தத்தில்
எத்தனை ஆறுதல்கள் , அவளோடு எத்தனை தோழமை , அவளுக்குள் எத்தனை நம்பிக்கை
காலங்கள் எவ்வளவு வேகமாய் ஓடியது , அவளுடைய தந்தை காலமான போது,
அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை , தெரியவில்லை
அதற்குபின் அவளை பார்க்கவும் முடியவில்லை ...
வயதுக்கு வந்து விட்டாளாம் ஆண் நண்பர்களோடு பழக கூடாதாம்
அவரவர்களின் கடமைகள் நினைவுகளை மறக்கடிக்க செய்தது
இதோ நான் பிரிந்து செல்கிறேன் , என் கடமைகள் என்னை வேறாக பிடுங்கி எடுத்து கொண்டு செல்கிறது
பிரிவிலும் அவளை பார்க்க முடியவில்லை , ஏதோ ஞாபகங்களை சுமந்து கொண்டு செல்கிறேன்
யாரோ என் தோள்களை உலுக்க , அந்த நினைவுகள் களைந்து நிகழ் காலம்
" ஏங்க bus கொஞ்சம் நேரம் நிற்குமாம் வாங்க எதாச்சும் சாப்பிட்டு வரலாம் "
இது என்னவள் , எல்லா பிரிவுகளின் வேதனைகளை மறக்கடிக்க செய்தவள்
இனி என் முடிவு பயணம் வரை எனக்காக அவள்
ஆனாலும் சில கனவுகளின் ஓரங்களில் , என் கடந்த கால பக்கங்களில் அந்த சிறு ஞாபகங்களில் அவள்
இன்னமும் இருக்கின்றாள் பக்கங்கள் கிழிக்க படாமல்
நலமாய் இருப்பாள் என நம்புகிறேன் !!!
Labels: கிழிக்க படாத பக்கங்கள்

0 Comments:
Post a Comment
<< Home